அமைச்சர் உதயநிதிஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு

by Staff / 20-11-2023 04:17:48pm
அமைச்சர் உதயநிதிஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் அடுத்த மாதம் 17ஆம் தேதி திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணி செயலாளர் கூட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வருகிறார். அந்த வகையில் நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக இளைஞரணி கூட்டம் நாளை நாமக்கல் அருகே நடக்கிறது. இதனை தொடர்ந்து சேலத்தில் நாளை மறுநாள் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இளைஞரணி மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து சிறப்புரையாற்றுகிறார். நடக்கவிருக்கும் திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை சேலம் வருகை தரவுள்ளார். அவரை வரவேற்க மாவட்ட எல்லையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via