பாஜக - அதிமுக கூட்டணியில் இருந்து அவுட் - ஜி.கே.வாசன்

by Staff / 23-11-2023 12:33:27pm
பாஜக - அதிமுக கூட்டணியில் இருந்து அவுட் - ஜி.கே.வாசன்

பாஜகவுடன், நெருக்கமான கூட்டணியில் இருந்தது அதிமுக, இந்தநிலையில், அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பகிரங்கமாக வெளியேறியது. இதனைத்தொடர்ந்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் யார் யார் அதிமுகவுடன் கூட்டணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பாஜக- அதிமுக கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விலகியுள்ளது என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ஜி.கே.வாசன், தற்போது வரை த.மா.கா எந்த கூட்டணியிலும் இல்லை. அதேநேரத்தில் பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் நட்புடன் இருக்கிறோம். 2024 தேர்தலில் த.மா.கா., முக்கிய சக்தியாக இருக்கும் எனக் கூறிய அவர், I.N.D.I.A கூட்டணி முரண்பாடான கூட்டணியாக உள்ளது என்று விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via