5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை  3 ஆம் தேதி நடக்கிறது. 

by Editor / 26-11-2023 10:01:24am
 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை  3 ஆம் தேதி நடக்கிறது. 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த அக் 9 ஆம் தேதி அறிவித்தது.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 4 மாநில தேர்தல் வாக்குப்பதிவுகளும்  முடிந்த நிலையில் 5 வைத்து மாநிலமான தெலங்கானாவில் நவம்பர் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 

சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப்பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக நடைபெற்றுள்ள 5 மாநில தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பா் 4ஆம் தேதி தொடங்குவைத்தால் 5 மாநில தேர்தல் முடிவுகள் அங்கு எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.

 

Tags :  5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை  3 ஆம் தேதி நடக்கிறது. 

Share via