சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது

by Staff / 01-12-2023 04:05:26pm
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது

சேலம் அம்மாபேட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (26) ஆட்டோ டிரைவர் இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 10 வயது சிறுமியிடம் மீன் வாங்கி தருவதாக கூறி மாலை 6 மணி அளவில் ஆட்டோவில் அழைத்துச் சென்றார். பின்னர் அந்த சிறுமி இரவு 10 மணி அளவில் அழுது கொண்டே வீட்டிற்கு வந்தார். சிறுமியிடம் மணிகண்டன் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அம்மாபேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via