கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு அண்ணாமலை வாழ்த்து

by Staff / 02-12-2023 12:17:27pm
கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு அண்ணாமலை வாழ்த்து

இந்தியாவின் 84வது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள தமிழக செஸ் வீராங்கனையும், பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான வைஷாலிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சகோதரி வைஷாலிக்கு பாஜக சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய அளவில் மூன்றாவதாகவும், தமிழக அளவில் முதல் பெண் கிராண்ட் மாஸ்டராகவும் சாதனை படைத்துள்ள வைஷாலி, உலக அரங்கில் மென்மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via