3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கிறது.

by Editor / 03-12-2023 11:12:39am
3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கிறது.

தெலங்கானா,மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் நடந்த சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக 140க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ராஜஸ்தானில் 100க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. அதே போல் சத்தீஸ்கரில் பாஜக 54 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் அம்மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி முதல் முறையாக ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கிறது.

Share via