ஆப்பிரிக்க அழகி போட்டியில் 2ஆம் இடம்: முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

by Staff / 09-12-2023 03:43:40pm
ஆப்பிரிக்க அழகி போட்டியில் 2ஆம் இடம்: முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

புதுச்சேரியை சேர்ந்த சான் ரேச்சல் (23), என்ற பெண் நைஜீரியாவில் 85 நாடுகள் பங்கேற்ற மிஸ் ஆப்பிரிக்கா அழகிப்போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு 2ஆம் இடத்தை பெற்றுள்ளார். பின்னர் நாடு திரும்பிய அவர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார். மேலும் இவர் மிஸ் புதுச்சேரி 2020, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, குயின் ஆஃப் மெட்ராஸ் 2022 ஆகிய விருதுகளை வென்றுள்ளார். முன்னதாக போட்டிக்காக நைஜீரியா செல்ல நிதி இல்லாமல் தவித்த அவருக்கு முதல்வர் உதவி புரிந்தார்.
 

 

Tags :

Share via