வெள்ளத்தில் தத்தளிக்கும் சீனம்: மக்கள் அவதி

by Admin / 30-07-2021 04:14:53pm
வெள்ளத்தில் தத்தளிக்கும் சீனம்: மக்கள் அவதி



சீனம் ஷின்ஜியாங் நகரில் பெருவெள்ளம் ஏற்பட்டதில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

சீனத்தில் உள்ள ஹெனன் மாகாணம், 60 லட்சம் மக்களுக்கு உறைவிடமாக திகழ்கிறது. இங்குள்ள அணைகள் மற்றும் உடைந்த பாலம் ஆகியவை கடந்த வாரம் பெய்க கனமழை காரணமாக சேதமடைந்தன.

மாகாணத்தின் தலைநகர் ஜெங்ஜோவில் ஓராண்டு காலத்திற்கு பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்து தீர்த்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 99 பேர் பலியாகியுள்ளதாக அரசு நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தது.

ஜெங்ஜோவில் பெய்த கனமழையால் மக்கள் ரயில் சுரங்கபாதைகளிலும் கார்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்பில் பொருள்கள் சேதமடைந்திருக்கலாம் என வியாபாரி ஒருவர் கூறியுள்ளார்.
விவசாயத்தை நம்பியிருக்கும் ஹெனன் மாகாணத்தில் 14 பில்லியன் டாலர்கள் மதிப்பில் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சம்மந்தப்பட்ட அமைப்புகள் கணித்துள்ளன,

 

Tags :

Share via