வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் பேட்டி -

by Editor / 18-12-2023 12:26:47am
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் பேட்டி -

தென்காசி, நெல்லை, கன்னியாக்குமரி, தூத்துக்குடி மாவட்ட வெள்ளப் பாதிப்புகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் பேட்டி -

நெல்லை,தூத்துக்குடி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 17, 18,ஆகிய  2 தினங்களுக்கு மிக அதிக கன மழை பெய்யும் என்று சொல்லி வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததன் விளைவாக இன்றைக்கு மாவட்ட நிர்வாகம் முடுக்கி விடப்பட்டுள்ளது.முதலமைச்சர் அவர்கள்,அமைச்சர்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உடனே செல்ல உத்திரவிட்டதின் காரணமாக  அமைச்சர்களான  நான் தென்காசிக்கும், தங்கம் தென்னரசு அவர்கள் திருநெல்வேலிக்கும், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் இரண்டு பேரும் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் பொறுப்பாக அங்கே இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று சொல்லி எங்களுக்கு உத்தரவிட்டுஇருக்கிறார்கள். உத்தரவு இட்டது மட்டுமின்றி  என்னையும் தங்கம் தென்னரசுவையும்  உடனடியாக திருநெல்வேலிக்கும், தென்காசிக்கும், சென்று  வெல்ல நிவாரணப்பணியை பணியை அரசு அதிகாரிகளோடு இருந்து சேர்ந்து இருந்து பணியாற்ற வேண்டும் என்று சொல்லி அனுப்பியதால் விளைவாக நானும் தென்னரசுவும்  இன்றைக்கு இருவோடு இரவாக இங்கே வந்திருக்கோம். மாவட்ட நிர்வாக  இன்றைக்கு மதியத்தில் இருந்து மாவட்ட நிர்வாகத்தோடு ஒவ்வொரு நேரமும் நாங்கள் கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம். எவ்வளவு மழை பெய்து இருக்கிறது, அணைக்கட்டுகளில் எவ்வளவு தண்ணீர் திறந்து வத்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு பாதிப்பு இருக்கிறது, எவ்வளவு நிவாரண மையங்களை உண்டாக்கி இருக்கிறது என்பதெல்லாம் இன்றைக்கு   மாவட்ட நிர்வாகத்தோடு கலந்து மாவட்ட ஆட்சித் தலைவேரோடு தொடர்பில் இருந்து  கலந்து அந்த பணிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம், 

மாவட்டங்களுக்கு தனித்தனியாக அமைச்சர்கள் மற்றும் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையான 250 மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கன்னியாக்குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்திற்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் 50 பேர் நாளை வருகை தர உள்ளனர்.

அதேபோல், பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக நெல்லையில் 19 முகாம்களும், கன்னியாகுமரியில் 4 முகாம்களும், தூத்துக்குடியில் 2 முகாம்களும், தென்காசியில் 1 முகாம்களும் என மொத்தம் 26 முகாம்கள் அமைக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

தேவையான அளவு மக்களுக்கு விநியோகம் செய்ய பால்,மற்றும் பால் பவுடர்கள் தயார் நிலையில் வைக்கப்பாட்டுள்ளதாகவும்,நாளை தேவையான இடங்களில் கண்காணிப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும்,ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும்,தென்காசி மாவட்டத்தில் 4 இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அந்தந்த தாலுகாவில் வட்டாட்சியர்கள் நிவாரணப்பணிகளை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Tags : வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் பேட்டி -

Share via