பிரதமரிடம் முதல்வர் வைத்த கோரிக்கைகள்

by Staff / 02-01-2024 04:01:47pm
பிரதமரிடம் முதல்வர் வைத்த கோரிக்கைகள்

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே வைக்கப்பட்ட கோரிக்கையை பிரதமர் பரிசீலிக்க வேண்டும். * சென்னை - பினாங்கு, சென்னை - டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை முன்னுரிமை அடிப்படையில் தொடங்க வேண்டும். * சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ‘பங்குப் பகிர்வு மாதிரி' அடிப்படையில் ஒன்றிய அரசின் பங்களிப்பை விரைந்து வழங்க வேண்டும். * இருவழிச்சாலையாக மேம்படுத்தப்படும் நெடுஞ்சாலைகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதில் விலக்கு அளிக்க வேண்டும்.

 

Tags :

Share via