விஜயகாந்த் மகன் படத்தில் நடிக்கத் தயார் - ராகவா லாரன்ஸ்

by Staff / 10-01-2024 01:26:35pm
விஜயகாந்த் மகன் படத்தில் நடிக்கத் தயார் - ராகவா லாரன்ஸ்

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் கேமியா ரோலில் நடிக்க தயாராக இருப்பதாக நடிகர் லாரன்ஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், இளைய மகன் சண்முக பாண்டியனுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்யப் போவதாக அறிவித்து இருக்கிறார் ராகவா லாரன்ஸ். அவருடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்றும், இது விஜயகாந்த்திற்கு செய்யும் நன்றிக்கடன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via