காதலியை ஸ்க்ரூடிரைவரால் சரமாரியாக குத்திய காதலன்

by Staff / 14-01-2024 05:29:09pm
காதலியை ஸ்க்ரூடிரைவரால் சரமாரியாக குத்திய காதலன்

டெல்லியின் மயூர் விஹாரில் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கருக்கலைப்பு செய்ய காதலி மறுத்ததால், அவரது காதலன் (19) ஸ்க்ரூடிரைவரால் சரமாரியாக குத்தி, பிளேடால் கழுத்தை அறுத்துள்ளார். வியாழனன்று, சில்லா கிராமத்தில் உள்ள தீயணைப்பு படை அலுவலகம் அருகே ஒரு இளம் பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்தார், உடனடியாக அப்பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அப்பெண்ணின் காதலனை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via