நாடாளுமன்ற தேர்தலுக்கான குழுக்கள் : திமுக தலைமை அறிவிப்பு

by Staff / 19-01-2024 12:12:40pm
நாடாளுமன்ற தேர்தலுக்கான குழுக்கள் : திமுக தலைமை அறிவிப்பு

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான குழுக்களை திமுக தலைமை அறிவித்துள்ளது. இந்த குழுக்களில், கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு என ஆகிய 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயார் செய்யும் குழுவுக்கு துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையிலும், தேர்தலுக்கான பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது.அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் நியமனம்.

 

Tags :

Share via