வெங்காய மசாலா டிஷ் செய்முறை

by Admin / 02-08-2021 10:51:03pm
வெங்காய மசாலா டிஷ் செய்முறை

 

தேவை

பெல்லாரி வெங்காயம் – 1/4 கிலோ

உருளைக்கிழங்கு – 3

பட்டாணி – 100 கிராம்

தக்காளி – 4

நல்லெண்ணெய் – 50 கிராம்

வற்றல் – 6

சீரகம் – 1 மேஜைக்கரண்டி

மல்லி – 1 மேஜைக்கரண்டி

கடுகு, உப்பு, மஞ்சள்

செய்முறை

        வெங்காயத்தை அரைக்கவும். வற்றல், மல்லி, சீரகம் இவற்றை அரைக்கவும். சட்டியைக் காயவைத்து எண்ணெய், கடுகு, கருவேப்பிலைப் போட்டு கடுகு வெடித்தபின் வெங்காயத்தையும், தக்காளியையும் வாசனை வரும் வரை வதக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிக்கும் போது வேக வைத்த பட்டாணி, வேக வைத்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டின உருளைக்கிழங்க சேர்த்து உப்பு, மஞ்சள் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு எண்ணெய் தெளியவும் இறக்கவும்.

 

Tags :

Share via