பொன்முடி மீதான வழக்கில் ஜெயக்குமார் தலையிடுவதற்கு எந்த அதிகாரம் இல்லை.

by Admin / 23-01-2024 03:55:14pm
 பொன்முடி மீதான வழக்கில் ஜெயக்குமார் தலையிடுவதற்கு எந்த அதிகாரம் இல்லை.

அரசுக்கு 28.36 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறி 2006 -2011 ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த பொன்முடி மீது 2012 ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை விழுப்புரம் பூந்துறைகிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக வழக்கு பதிவு செய்தது .பொன்முடி அவரது மகன் கௌதசிகாமணி உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்கு பதியப்பட்டது, இவ்வழக்கு ஜனவரி 22ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ,முன்னாள் அ.தி.மு.க அமைச்சர். ஜெயக்குமார் தன்னை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை மனு  அளித்திருந்தாா். இம் மனு மீதான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்குகளின் தீர்ப்பின் அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கில் ஜெயக்குமார் தலையிடுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறி அவரது மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்,

 

Tags :

Share via