விஜயகாந்தின் படத்திறப்பு கட்சியினா் கலந்துகொள்ள அழைப்பு.

by Staff / 23-01-2024 04:24:38pm
விஜயகாந்தின் படத்திறப்பு கட்சியினா் கலந்துகொள்ள அழைப்பு.

மறைந்த விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ,தே.மு.தி.க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தே.மு.தி.க நிறுவனர் .விஜயகாந்தின் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 அன்று நடைபெற உள்ளதாகவும்  இந் நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via