சமூக நீதிப் பிம்பம் - எல்.முருகன் விமர்சனம்

by Staff / 06-02-2024 05:36:09pm
சமூக நீதிப் பிம்பம் - எல்.முருகன் விமர்சனம்

திமுக-வின் போலி திராவிட மாடல் சமூகநீதி பிம்பம் இன்று மக்களவையில் வெளிப்பட்டுள்ளது என மத்திய இணையமைச்சர் எல். முருகன் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். திமுக-வைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவிற்கு இந்த தரங்கெட்ட பேச்சு முதல் முறையல்ல. சமூகநீதிக்கும் இவர்களுக்கும் இருக்கும் தூரத்தை இன்று காட்டியுள்ளார்கள். போலி திராவிட மாடல் சமூகநீதி பிம்பத்தை முகத்தில் மாட்டிக் கொண்டு திரியும் உங்களின் (திமுக) முகமூடியை, வருகின்ற தேர்தலில் மக்கள் கிழித்தெறிவார்கள் என்பதில் எந்த மாற்றமுமில்லை என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via