சரிந்தது டாஸ்மாக்கில் புல் பாட்டில் விற்பனை.

by Editor / 14-02-2024 08:39:25am
சரிந்தது டாஸ்மாக்கில் புல் பாட்டில் விற்பனை.

தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் (டாஸ்மாக்) நடத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் 43 சாதாரண வகை, 49 நடுத்தர வகை, 128 பிரீமியம் வகை பிராண்டுகளும், 35 வகையான பீர், 13 வகையான ஒயின் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இது தவிர வெளிநாட்டு மதுபானங்கள் எலைட் டாஸ்மாக் கடைகள் மூலம் பிரத்யேகமாக விற்கப்படுகின்றன.

அரசின் வருவாயில் மதுபான விற்பனை முக்கிய பங்கு வகிக்கிறது. திருவிழா, பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மது விற்பனை சினிமா படங்களின் வசூலையும் விஞ்சி சாதனை படைப்பது உண்டு. இந்நிலையில், தற்போது, டாஸ்மாக் கடைகளில், சாதாரண ரக குவார்ட்டர் பாட்டில் ரூ.130. ஆஃப் பாட்டில் ரூ.260, ஃபுல்பாட்டில் ரூ.520 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதுவே நடுத்தர வகை மதுபானங்கள் ரூ.160 முதல் ரூ.640 வரை விற்கப்படுகின்றன.தமிழக அரசானது மதுபானங்களின் விலையை உயர்த்தி உத்தரவிட்டது. பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் விலை உயர்வு நடைமுறைக்கு வந்தது.

சாதாரண சாதாரண மதுபாட்டில்களுக்கு குவார்ட்டருக்கு 10 ரூபாய் ஆஃப் பாட்டில் 20ரூபாய்,புல் பாட்டில் 40 ரூபாயாகவும்,அதே போன்று பிரீமியம் சரக்குகளுக்கு முறையாக 20,40,80என அதிகரிக்கபட்டுள்ளதாகவும்  அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு செல்லும் மதுபிரியர்கள் புதிதாக குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளனர். சாதாரண சரக்குகள் இல்லாமல் பிரிமியம் சரக்குகளை தருவதாகவும் தெரிவிக்கின்றனர்.மேலும் டாஸ்மாக் தரப்பில் கேட்டபொழுது தற்போது குவார்ட்டர் மற்றும் ஆப் விற்பனையே அதிகரித்து இருப்பதாகவும், டாஸ்மாக்கில் புல் பாட்டில் விற்பனை சரிந்து இருப்பதாகவும்  தெரிவிக்கின்றனர்.

 

Tags : சரிந்தது டாஸ்மாக்கில் புல் பாட்டில் விற்பனை.

Share via