முதல்வர் விஜயன் மகளுக்கு உயர்நீதிமன்றத்தில் பின்னடைவு
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள Exalogic என்ற தனது நிறுவனம் மூலம் மென்பொருள் சேவைகளை வீணா வழங்கி வருகிறார். அந்த நிறுவனத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு ஜனவரி 31ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து வீணா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகல் இன்று வெளியாகிறது. SFIO விசாரணையை கேள்விக்குள்ளாக்கிய வீணாவின் மனுவை உயர் நீதிமன்றத்தின் ஒற்றை பெஞ்ச் நேற்று நிராகரித்தது.
Tags :