கல்விக்கடன் வழங்க ரூ.2,500 கோடி ஒதுக்கீடு

by Staff / 19-02-2024 12:03:01pm
கல்விக்கடன் வழங்க ரூ.2,500 கோடி ஒதுக்கீடு

ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த அவர், நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்ப்புதல்வன் என்ற புதிய திட்டத்திற்கு ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ.3,743 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கோவையில் பிரமாண்ட நூலகம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும். பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ரூ.300 கோடியில் உருவாக்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.

 

Tags :

Share via