ஜாபர் சாதிக்குக்கு எதிராக ‘லுக்-அவுட்’ நோட்டீஸ்

by Staff / 02-03-2024 12:21:02pm
ஜாபர் சாதிக்குக்கு எதிராக ‘லுக்-அவுட்’ நோட்டீஸ்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், வெளிநாடுதப்பிச் செல்வதை தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுகசென்னை மேற்கு மாவட்ட அயலகஅணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டார். தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் மற்றும் கூட்டாளிகளை டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.இந்நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும்வகையில், ஜாபர் சாதிக்குக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீஸார் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இனி அவர் எந்த விமானநிலையத்துக்கு சென்றாலும், உடனடியாக அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார். இதற்காக அனைத்து விமான நிலைய அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடல், தரை மார்க்கமாக அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கவும் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via