அதிமுகவுடன் இணையும் புதிய தமிழகம்? - தலைவர்கள் சந்திப்பு

by Staff / 03-03-2024 12:41:49pm
அதிமுகவுடன் இணையும் புதிய தமிழகம்? - தலைவர்கள் சந்திப்பு

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார்.புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் செயல்பட்டு வந்தார். ஆனால், அவர் கேட்ட தென்காசி மக்களவைத் தொகுதியை கொடுக்க பாஜக முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பாஜக மீது அதிருப்தியில் இருந்த கிருஷ்ணசாமி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை நேற்றுசந்தித்து பேசியுள்ளார்.

 

Tags :

Share via