கல்பாக்கம் ஈனுலை திட்டத்தைக் கைவிடுக - சீமான் வலியுறுத்தல்

by Staff / 04-03-2024 11:44:26am
கல்பாக்கம் ஈனுலை திட்டத்தைக் கைவிடுக - சீமான் வலியுறுத்தல்

செங்கல்பட்டில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதிதாக ஈனுலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் இன்று தமிழகம் வரும் மோடி அதைத் தொடங்கி வைக்க உள்ளார். திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகவும், ஆபத்தான புளூட்டோனியத்தை எரிபொருளாகவும் கொண்ட இத்தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்,கல்பாக்கத்தில் இன்று திறக்க உள்ள அதிவேக ஈணுலை திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via