காதல் ஜோடி தற்கொலை

by Staff / 09-03-2024 04:12:12pm
காதல் ஜோடி தற்கொலை

மணப்பாறை அடுத்த கருத்தகோடாங்கி பட்டியை சேர்ந்த பொன்னுசாமி. இவரது மகள் ஶ்ரீநிதி(15). இவர் கருத்தகோடாங்கி பட்டி அருகே உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான பொ. நைனான் (எ) அஜித் (19) என்பவரை ஸ்ரீநிதி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென ஸ்ரீநிதி வீட்டை விட்டு மாயமாகியுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கிராமத்தை ஒட்டியிருக்கும் காட்டுப்பகுதியில் இருவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அங்கு சென்று பார்த்தபோது மாணவி கழுத்தில் தாலியுடன் தூக்கில் தனது காதலனுடன் தொங்கியபடி இருந்துள்ளனர்.. வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தாலி கட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்..

 

Tags :

Share via

More stories

Logo