அமெரிக்காவில் பிரபல நடிகை மர்ம மரணம்

by Staff / 14-03-2024 05:26:43pm
அமெரிக்காவில் பிரபல நடிகை மர்ம மரணம்

அமெரிக்காவில் கடந்த 1984-ம் ஆண்டில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஜெனரல் ஹாஸ்பிடல்' நாடகத் தொடரில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ராபின் பெர்னார்ட் (64). இந்நிலையில் கலிபோர்னியாவின் சான் ஜசிந்தோவில் ஒரு திறந்தவெளிப் பகுதியில் நேற்று இவரது சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று ராபின் பெர்னார்ட்டின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இவரது மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via