ரஷ்யாவில் இன்று தொடங்கியது அதிபர் தேர்தல்

by Staff / 16-03-2024 11:56:41am
ரஷ்யாவில் இன்று தொடங்கியது அதிபர் தேர்தல்

ரஷ்யாவில், நாடு முழுவதும் 1 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதிபர் தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். ரஷ்யா மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் தூதரகங்களிலும் வெளிநாடு வாழ் ரஷ்யர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 11 கோடியே 23 லட்சம் ரஷ்யர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வலுவான எதிர்க்கட்சி வேட்பாளர் இல்லாததால் புதின் மீண்டும் அதிபராக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

 

Tags :

Share via