இன்று ஒன்பது முப்பது மணி அளவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.

by Admin / 18-03-2024 12:35:33am
இன்று  ஒன்பது முப்பது மணி அளவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.

இன்று திங்கட்கிழமை ஒன்பது முப்பது மணி அளவில் ஐ.பி.எல் தொடக்க விளையாட்டிற்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நேரடியான டிக்கெட் விற்பனை தவிர்க்கப்பட்டு ஆன்லைன் மூலமாக டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. பேடிஎம் வழியாகவும் www.insider.in [இன்சைடர் டாட் இன் ]என்கிற இணையதளத்தின் வழியாகவும் டிக்கெட் பதிவு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 17 ஆண்டுகளாக நடந்து வரும் ஐ.பி.எல்10 அணிகள் போட்டியிடும் கிரிக்கெட் போட்டி.முதலாவது போட்டி 22 ஆம் தேதிமாலை 6.30 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. 10 அணிகள் போட்டியிடும் போட்டி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. ஆன்லைன் வழியாக டிக்கெட் பெற விரும்புபவர்கள் 1,700 ரூபாய் டிக்கெட்டில் இருந்து 7,500 ரூபாய் வரையிலான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக ஒருவர் இரண்டு டிக்கெட் மட்டுமே பெற முடியும் என்றும் போட்டியை பார்க்கிற வருகிற ரசிகர்கள் மைதானத்திற்குள் பிளாஸ்டிக் பொருள்கள், தண்ணீர் பாட்டில், உணவுப் பொருள்கள், புகையிலை பொருட்களை எடுத்து வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று  ஒன்பது முப்பது மணி அளவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.
 

Tags :

Share via