சத்தியமங்கலம்: ரவுடியை கொன்று புதைத்த வாலிபர் கைது

by Staff / 20-03-2024 02:42:50pm
சத்தியமங்கலம்: ரவுடியை கொன்று புதைத்த வாலிபர் கைது

சத்தியமங்கலம் வடக்கு பேட்டையை சேர்த்தவர்நாக ராஜ். இவருடைய மகன் விக்கி என்கிற விக்னேஷ (வயது 32), லாரி டிரைவர். இவர் கடந்த மாதம் 24-ந்தேதி காலையில் வீட்டைவிட்டு வெளியே பிள்ளர் வீடுதிரும்பவில்லை, இதனால் உறவினர்கள் அவரை பல இட்ங்களில் தேடிப்பார்த்தனர ஆனால் கிடைக்கவில்லை. இதுகுறித்து நாகராஜ் கடந்த 13-ந் தேதி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விகனேஷ் மீது சத்தியமங்கலம் மற்றும் சுற்றியுள்ள போலீஸ் நிலையங்களில் 10 வழக்குகள் உள்ளன. மேலும் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இவர் பெயர் உள்ளது. இந்த நிலையில் விக்னேஷ் குறித்து அவருடைய நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதற்கிடையே ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகரின் உத்தரவின் பேரில் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமேஸ்வரன், மேனகா மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் விகனேசை கொலை செய்ததாக கூறி சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (32) என்பவர் கிராம நிர்வாக அலுவலர் சபரிவாசனிடம் நேற்று முன்தினம் சரண் அடைத்தார். பின்னர் அவர் சத்தியமங்கலம் போலீசாரிடம்
ஒப்படைக்கப்பட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர், தேவராஜ், ஜபருல்லா, பிரபாகரன். மோகன்ராஜ். முத்துக்குமார் உள்பட 7 பேருடன் சேர்ந்து விக்னேசை கொலை செய்து அத்தாணி ரோட்டில் காசி காடு பகுதியில் உள்ள ஒரு பள்ளம் அருகே புதைத்ததாக தெரிவித்தார். இதன் மூலம் விக்னேஷ் மாயமான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.

இதைத்தொ டர்ந்து போலீசார் விக்னேஷ் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்தனர். நேற்று காலை 11 மணிக்கு சசிகுமாரை, விக்னேஷ் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுமாறு அழைத்து சென்றனர். அதைத்தொடர்ந்து போலீசாருடன் சென்று விக்னேஷ் புதைக்கப்பட்ட இடத்தை சசிகுமார் அடையாளம் காட்டினார். பின்னர் விக்னேஷ் உடல் தோண்டி எடுக்கப்பட்டது அதன்பின்னர் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் அதே இடத்தில் விக்னேஷ் உடலை பிரேத பரிசோதனை செய்தார். தொடர்ந்து அதே இடத்தில் விக்னேசின் உடல் புதைக்கப்பட்டது.

அப்போது சத்தியமங்கலம் தாசில்தார் மாரிமுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். விக்னேசை கொலை செய்தது எப்படி? எதற்கு கொலை செய்தார்? என்று சசிகுமாரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை தேடி வருகின்றனர். ரவுடி கொலை செய்யப் பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via