மூத்த பெங்காலி நடிகர் பார்த்தசாரதி தேப் காலமானார்

by Staff / 23-03-2024 02:50:05pm
மூத்த பெங்காலி நடிகர் பார்த்தசாரதி தேப் காலமானார்

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த பெங்காலி நடிகர் பார்த்தசாரதி தேப் (68) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் இன்று தெரிவித்தனர். நீண்ட காலமாக சிஓபிடி தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த ஒரு வார காலமாக ஐசியுவில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via