டிடிவி தினகரனை  குடும்பத்தோடு சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ் குடும்பத்தினர்.

by Editor / 25-03-2024 09:13:54am
டிடிவி தினகரனை  குடும்பத்தோடு சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ் குடும்பத்தினர்.

தேனி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பிரஷர் குக்கர் சின்னத்திற்காக அவர் வாக்கு சேகரிக்க தேனி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். நேற்று டிடிவி தினகரன் மற்றும் அவரது மனைவியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய மூத்த மகனும் எம்.பி.யுமான ஓ.பி.ரவிந்திரநாத், இளைய மகன் ஜெயபிரதீப், அவருடைய சகோதரர் ஓ.ராஜா மற்றும் குடும்பத்தினர் நேரில் சென்று வாழ்த்தினர்.

 

Tags : டிடிவி தினகரனை  குடும்பத்தோடு சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ் குடும்பத்தினர்.

Share via