இபிஎஸ்-ஐ விட சசிகலா வயதில் பெரியவரா அமைச்சர் உதயநிதி
சசிகலா காலில் எடப்பாடி பழனிச்சாமி விழுந்த போட்டோவை காட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரங்களில் விமர்சித்து வருகிறார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ‛‛நான் பெரியவங்ககிட்ட ஆசி வாங்குவது என்ன தப்பா'' என கூறினார். இந்நிலையில் தான் பிறந்த தேதி அடிப்படையில் பார்த்தால் எடப்பாடி பழனிச்சாமி தான் சசிகலாவை விட மூத்தவர் என்பது உறுதியாகி உள்ளதால் அவரை எதிரணியில் உள்ளவர்கள் விமர்சிக்க தொடங்கி உள்ளனர். அதாவது எடப்பாடி பழனிச்சாமி 20.03.1954 என்ற தேதியில் பிறந்துள்ளார். ஆனால் சசிகலா 18.08.1954ல் தான் பிறந்துள்ளார். அதன்படி பார்த்தால் சசிகலாவை விட எடப்பாடி பழனிச்சாமி தான் 5 மாதங்கள் மூத்தவர் என்பது உறுதியாகி உள்ளது.
Tags :