தனியார் நூற்பாலையில் உள்ள குடோனில் தீ விபத்து

by Staff / 29-03-2024 04:41:44pm
தனியார் நூற்பாலையில் உள்ள குடோனில் தீ விபத்து

வடமதுரை அருகே தனியார் நூற்பாலையில் உள்ள குடோனில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் பருத்தி பஞ்சு பண்டல்கள் எரிந்து சேதமடைந்தன. வடமதுரை அடுத்துள்ள வேல்வார் கோட்டைபகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பு மில்லில் உள்ள பருத்தி பஞ்சு பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள குடோனில் நேற்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.இது பற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பருத்தி பஞ்சு பண்டல்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாக கூறப்பட்டது. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

Tags :

Share via

More stories

Logo