ஆக்கிரமிப்புகள் அனைத்தும் கையகப்படுத்தபடும்... அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்...

by Admin / 05-08-2021 03:57:06pm
ஆக்கிரமிப்புகள் அனைத்தும் கையகப்படுத்தபடும்... அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்...



தமிழகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் கையகப்படுத்தபடும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமையில்,
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் குறித்து சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் சென்னை எழிலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவாக செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் கே.கே.எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் :-

சென்னை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் பொறுப்பில் உள்ள பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை மனுக்கள் சரி செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்று ஆய்வு செய்யபட்டது.

சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டடங்களில் பட்டா வழங்குதல் தொடர்பான மனுக்கள் அதிகம் வந்துள்ளன சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள நான்கு மாவட்டங்களில் பட்டா முறைகேடுகள் அதிகம் உள்ளன நிலத்திற்கான போலி ஆவணங்கள் அதிகம் உள்ளன அவை அனைத்தையும் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பட்டா எண் வழங்குதலில் ஏதேனும் தவறு ஏற்பட்டிருந்தால் சம்மந்த பட்ட வட்டாட்சியர் மூலம் பிரச்சனையை தீர்க்க உத்தரவிட்டுளோம். அரசு நிலங்களில் தனியார் ஆகிரமிப்பு செய்திருந்தால் அதனை அகற்ற உத்தரவிட்டுள்ளோம். பேரிடர் காலங்களில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்கள் வருவாய் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கூவம் ஏரிக்கரை பகுதிகளில் உள்ள ஆகிரமிப்புகள் அகற்றப்பட்டு அங்கு குடியிருந்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக பொதுப்பணித்துறையுடன் இணைந்து அவற்றை அகற்றும் பணியில் விரைந்து ஈடுபட உள்ளோம்.

 சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள நான்கு மாவட்டங்களில் நிலத்தின் மதிப்பு அதிகம் உள்ளது. அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கு அரசுக்கு நிலங்கள் தேவை அதிகம் உள்ளது எனவே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பாதுகாக்கப்படும். தயவு தாட்சனியம் இல்லாமல் யார் ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் அகற்றப்படுவார்கள்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆக்கிரமிப்பு பட்டியல் எடுக்கப்பட்டு. ஆக்கிமிப்பாளர் யார் என கண்டறிந்து நீதிமன்றத்தில் கேவியட் தாக்கல் செய்து 99 சதவிகித  ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் அரசால் கையக்கப்படுத்தப்படும். அரசின் வளர்ச்சி பணிக்கு அதிக நிலங்கள் தேவை படுவதால் ஆக்கிரமிப்பு இடங்கள் கையகப்படுத்தபடும்

பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளதால் சாதி சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் உடனடியாக வழங்க  உத்தரவிடபட்டுள்ளது. சென்னையில் உள்ள கூவம் ஆக்கிரம்பிப்புகளை அகற்றி அவற்றை சீரமைக்க வேண்டும் என்பது முதல்வரின் கனவு திட்டம் அவற்றை கண்டிப்பாக செயல்படுத்துவோம். தஞ்சை சார்ஸ்த்ரா பல்கலை கழகம் நில ஆக்கிரமிப்பு  குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. ஆய்வறிக்கை பெற்ற வுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

Tags :

Share via