இளம்பெண்கள் வேலைக்காக வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லக்கூடாது - கனிமொழி கருணாநிதி

by Admin / 31-03-2024 02:15:16pm
இளம்பெண்கள் வேலைக்காக வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லக்கூடாது - கனிமொழி கருணாநிதி

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் 'இந்தியா' கூட்டணி வேட்பாளராக திமுக சார்பில் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சார மேற்கொண்டு வரும் கனிமொழி கருணாநிதி,    நாலாட்டின் புதூர், வானரமுட்டி, கழுகுமலை, செட்டிகுறிச்சி, கயத்தார் ,அகிலாண்டபுரம் ,கடம்பூர், காமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார், அப்போதுm பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் மலர்களை தூவி மலர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்..

வாக்கு கேட்டு பேசிய கனிமொழி கருணாநிதி , இளைஞர்கள் இளம்பெண்கள் வேலைக்காக வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லக்கூடாது என்ற வகையில் 16,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிக் பாஸ் என்ற மின்சார கார் தயாரிக்கும் தொழிற்சாலை தூத்துக்குடி சிப்காட் பலகத்தின் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் இளம் பெண்களுக்கு  வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளார் இளைஞர்கள் இளம் பெண்களுடைய எதிர்காலம் வேலை வாய்ப்பு பற்றி சிந்திக்க கூடிய ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி..ஆனால், ஒன்றியத்தில் உள்ள ஆட்சி 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக சொன்னார்கள். ஆனால், இதுவரை யாருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி தரவில்லை ..படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு குறித்து கேட்டால் பக்கோடா போட்டு விற்பனை செய்ய சொல்கிறார்கள். நம்மிடமிருந்து நிதியை வாங்கிக் கொண்டு சென்று குறைந்த அளவு நிதியே நமக்கு திருப்பித் தருகிறார்கள் குறைந்த அளவு நிதி தந்தாலும் தமிழக முதல்வர் ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழங்கி வருகிறார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மீதமுள்ள பெண்களுக்கும் தேர்தல் முடிந்த பிறகு கணக்கெடுப்பு நடத்தி அந்த பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், உலகிலேயே பெரிய ஊழல் பண்ணி இருக்கக் கூடிய கட்சி பா.ஜ.க தான் தேர்தல் பத்திரம் மூலமாக பல ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது .பா.ஜ.க. ஆனால் இந்த தேர்தல் பத்திரம் அரசியல் அமைப்புக்கு எதிரான உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பா.ஜ.க .என்ன செய்து உள்ளது என்றால் ஒரு நிறுவனத்தை மிரட்டி வீடியோ ரயில் நடத்த வேண்டியது. உடனே அவர்கள் தேர்தல் பத்திரம் மூலம் பணத்தை வழங்கி வந்துள்ளனர்.. இது எப்படி இருக்கிறது என்றால் ஒருவன் வீட்டுக்குள் புகுந்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறிப்பது போல் உள்ளது என தெரிவித்தார்.

மேலும் எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் மீது வழக்கு மேலும் இரண்டு முதலமைச்சர்களை சிறையில் அடைத்துள்ளனர் இப்படி எல்லாரையும் மிரட்டி ஆட்சியில் இருக்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் பிஜேபிக்கு ஒன்றை சொல்ல நினைக்கிறேன் இதுதான் பிஜேபியின் கடைசி தேர்தல் நாடு உங்களை புறக்கணிக்க போகிறது என தெரிவித்த அவர் மேலும் நாடு முழுவதும் மக்கள் பிஜேபியை வீட்டுக்கு அனுப்ப தயாராகி விட்டார்கள் என தெரிவித்தார் மேலும் பெட்ரோல் டீசல் கேஸ் உள்ளிட்டவர்களை விலைகளை  உச்சத்திற்கு முயற்சி உள்ளது பாஜக அரசு ஆனால் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கும் பெட்ரோல் 75 ரூபாய்க்கும் டீசல் 65 ரூபாய்க்கும் வழங்கப்படும் எனவும் மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து டோல்கேட்களும் அகற்றப்படும் எனவும் மேலும் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற திமுகவுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இந்த பிரச்சார பயணத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன் கருப்பசாமி திட்டக்குழு உறுப்பினர் அய்யாதுரை மற்றும் 

காங்கிரஸ்  மதிமுக விடுதலை சிறுத்தைகள் சமத்துவ மக்கள் கழகம் முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

இளம்பெண்கள் வேலைக்காக வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லக்கூடாது - கனிமொழி கருணாநிதி
 

Tags :

Share via