"வெற்றியோடு வருவேன்" - இயக்குனர் அமீர்

by Staff / 31-03-2024 04:15:23pm

ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இயக்குனர் அமீர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், “கொஞ்சமும் தயக்கமில்லாமல், என் தரப்பில் இருக்கும் நியாயத்தையும், உண்மையையும் எடுத்துச் சொல்வேன். 100% இறைவன் அருளால் வெற்றியோடு வருவேன்” என கூறியிருக்கிறார். போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக 2ம் தேதி ஆஜராகுமாறு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில், ஆடியோ வெளியிட்டு அமீர் விளக்கம் அளித்துள்ளார்

 

Tags :

Share via