காங்கிரஸ் கட்சியிடம் மேலும் ரூ.1745 கோடி கேட்டு நோட்டீஸ்

by Staff / 31-03-2024 05:22:57pm
காங்கிரஸ் கட்சியிடம் மேலும் ரூ.1745 கோடி கேட்டு நோட்டீஸ்

காங்கிரஸ் கட்சியிடம் மேலும் ரூ1745 கோடி வரி கோரி, வருமான வரித்துறையின் புதிய நோட்டீஸ் வந்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக இதுவரை ரூ3567 கோடிக்கு வருமான வரித்துறை நெருக்கடியை காங்கிரஸ் எதிர்கொண்டுள்ளது. ரூ1823 கோடிக்கு வரி கோரி காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பட்ட சில தினங்களில் இந்த புதிய நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி அறிவிப்புகள் 2014-15 மற்றும் 2016-17 நிதியாண்டுகளுக்கானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via