திமுக ஆட்சி பலம் அதிகார பலம் பணபலம் ரவுடி வைத்து கள்ள ஓட்டு போட முயற்சி செய்வார்கள்.-பிரேமலதாவிஜயகாந்த்.

by Editor / 10-04-2024 08:45:36am
திமுக ஆட்சி பலம் அதிகார பலம் பணபலம் ரவுடி வைத்து கள்ள ஓட்டு போட முயற்சி செய்வார்கள்.-பிரேமலதாவிஜயகாந்த்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:திமுக ஆட்சி பலம் அதிகார பலம் பணபலம் ரவுடி வைத்து கள்ள ஓட்டு போட முயற்சி செய்வார்கள்.
ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்கள் கேப்டன் கேப்டன் என்று சொல்லும் பொழுது கேப்டன் எங்கேயும் போகவில்லை என் கையிலே இருக்கிறார் நீங்கள் யாரும் கவலைப்பட கூடாது நமக்கு தெய்வமா கூடவே இருந்து எல்லாரையும் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.தமிழகம் முழுவதும் சென்று இரட்டை இலை சின்னத்திற்காக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறேன்.இன்னும் விஜய் பிரபாகரனுக்கு கூட விருதுநகர் செல்லவில்லை எல்லோரும் சொன்னாங்க விஜய பிரபாகரனுக்கு போகலையானு நான் சொன்னேன் சுர்ஜித் சங்கர் கூட என்னுடைய பிள்ளை தான் 40 தொகுதியில் போட்டியிடுகின்ற நம் வேட்பாளர்கள் அனைவரும் எனது பிள்ளைதான்.

திமுக சும்மாவே ஆடுவாங்க இப்ப ஆட்சியில இருக்காங்க அதனாலதான் சொல்றேன் அதை விட நாம ரொம்ப ஆடுவோம். அவங்களுக்கு  நாங்கள் யார் பணங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம்.களத்தில் இறங்கி வெற்றி வீரர்களாக உண்மையாக நேர்மையாக உறுதியாக நம்ம வேட்பாளரை வெற்றி பெற வைப்போம்.விலை வாசி உயர்வு ஒரு கிலோ அரிசி 15 ரூபாய் உயர்வு எங்க பாத்தாலும் டாஸ்மாக், கஞ்சா, சட்டம் ஒழுங்கு சீர்கேடு இன்று பலவிதத்தில் மக்கள் பாதிக்கப்படுகிற நிலை இருக்கிறது.

இந்த நிலை எல்லாம் மாத்த வேண்டும்.மேலும் மத்தியில் இருக்கின்ற மோடி என்ன சொன்னார் வருஷத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்று சொன்னார் எங்கேயாவது ஒருத்தருக்கு கொடுத்தாரா அதேபோல கேஸ் சிலிண்டர் என்ன விலை விற்கிறது? சிந்தித்து பார்க்க வேண்டும் உறுதியாக சிலிண்டர் விலையை பாதியாக குறைத்து மக்களுக்கான இந்த கூட்டணி உதவி செய்யும் என உறுதி அளிக்கிறேன்.அதேபோல பெட்ரோல் டீசல் விலை பால் கட்.டண உயர்வு சொத்து வரி உயர்வு அத்தனையும் குறைத்து இந்த வரப்போகும் நம்ம ஆட்சி மக்களாட்சியாக மலர இந்த தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

 

Tags : -பிரேமலதாவிஜயகாந்த்.

Share via