எலிகள் மூலம் புதிய வகை கொரோனா அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

by Staff / 13-03-2023 04:52:29pm
எலிகள் மூலம் புதிய வகை கொரோனா அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

அமெரிக்காவில் அமெரிக்கன் சொசைட்டி ஃபார் மைக்ரோபயலாஜி என்ற அறிவியல் அமைப்பு நுண்ணுயிர் மற்றும் அதன் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்தொற்று குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது. சமீபத்தில் இந்த அறிவியல் அமைப்பு கோவிட்-2 வைரஸின் ஆல்பா, டெல்டா மற்றும் ஓமிக்கிரான் வகைகள் எலிகளிடம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.வைராலஜிக்கல் ஆய்வுகள் மற்றும் மரபணு வரிசைமுறைக்காக 79 எலிகளிடமிருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யப்பட்ட போது 13 எலிகளில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆராய்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்திய டாக்டர் ஹென்றி வான் கூறியதாவது: எங்களைப் பொறுத்தவரையில் எலிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படக்கூடும் என்பதற்கான முதல் உறுதியான ஆதாரத்தை கொடுத்த ஆய்வு இதுதான். நியூயார்க் நகரில் உள்ள எலிகள் பல்வும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதால் இது விரைவில் வெவ்வெறு திரிபுகளில் மாறலா. இது மனிதகர்களுக்கு பரவினால் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via