புதிய அதிபராக ராம் சந்திரா பவுடால் பதவியேற்பு

by Staff / 13-03-2023 04:36:47pm
 புதிய அதிபராக ராம் சந்திரா பவுடால் பதவியேற்பு

நேபாளம் அதிபராக இருந்த பித்யா தேவி பணடாரி பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் நேபாளம் காங்கிரஸ், சிபிஎன் உள்பட 8 கட்சிகள் ஆதரவுடன் ராம் சந்திரா பவுடால் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து சிபிஎம் கட்சி சாரிபில் நெம்பவாங் போட்டியிட்டார்.நேபாள நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டசபைகளில் இருந்து 884 உறூப்பினர்கள் அதிபரை தேர்வு செய்ய வாக்களித்தனர். இதில் ராம்சந்திரா பவுடால் 33 ஆயிரத்து 802 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சுபாஷ் சந்திர நெம்பவாங் 15 ஆயிரத்து 518 வாக்குகள் பெற்றார். இதனையடுத்து ராம் சந்திரா பவுடால் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவில் தலைமை நீதிபதி ஹரி கிருஷ்ணா கார்கி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். புதிய அதிபர் ராம் சந்திரா பவுடாலுக்கு 78 வயதாகிறது.

 

Tags :

Share via