ஒரே அம்பிகை இரண்டு அம்பாள் வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்

by Editor / 06-08-2021 03:55:15pm
ஒரே அம்பிகை இரண்டு அம்பாள் வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்

(ஆடி வெள்ளி சிறப்பு கட்டுரை )

மதுரை தெப்பக்குளத்துக்கு அருகில் உள்ள ஒரு அழகான திருக்கோவில் வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்.

மதுரையின் காவல் தெய்வமாக அம்பிகை வீற்றிருக்கும் இந்தக் கோவிலில் அம்பாள் மிகுந்த அருள் பாலிக்கிறார். இவளே ஆதி தெய்வமாகவும் வழிபடப்படுகிறாள். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த விஷயங்கள் நடத்தினாலும் முதலில் இந்த அம்பாளிடம் உத்தரவு கேட்டுவிட்டு அதன்பின்பே நடத்துகிறார்கள் . மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள் விழா நடக்கும் முன்பு முதல் பூஜை இங்கு செய்யப்படுகிறது .

கோவிலுடன் சேர்ந்துள்ள இந்த தெப்பக்குளம் மதுரை நகரில் மிகப்பெரிய தெப்பம் எனும் பெருமையை உடையது . எந்த அம்மன் கோவிலில் இல்லாத விதமாக இந்த அம்மனிடம் மிகச் சிறப்பாக கருதப்படுகிறது.

இந்தத் தெப்பத்தை தோண்டும் பொழுது கிடைத்த மிகப்பெரிய முக்குறுணி விநாயகர் சிலை ஒன்று மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாட்டிற்கும் வைக்கப்பட்டு உள்ளது சிறப்பு அம்சமாகும்.

இந்தத்தலம் அம்மை நோய் தீர்க்கும் தலம் என்ற பெருமை உடையது. இந்த அம்பாள் பிரதானம் என்பதால் வேறு பரிவார தெய்வங்கள் இங்கு கிடையாது. அரசமரத்தின் அடியில் விநாயகர் மற்றும் பேச்சியம்மன் மட்டுமே உள்ளனர். பேச்சியம்மன் அருகில் ஒருவரின் கழுத்தை இடது கையால் சுற்றி வளைத்த வித்தியாசமான கோலத்தில் இங்கே அம்பாள் காட்சி தருகிறாள்.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நகரத்தின் மன்னன் கூன் பாண்டியன் ஆட்சி புரிந்து வந்தார். அப்பொழுது மலையின் கிழக்கே தற்போது கோவில் வீற்றிருக்கும் பகுதி மகிழ மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அந்த காட்டினை குரும்பர் என்னும் இனத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து அந்தப் பகுதியையே அழித்து வந்தனர். நாளுக்கு நாள் அவர்களின் தொந்தரவு கூடுதலாகவே ஒரு நாள் இந்தப் பகுதிக்கு வந்த மன்னர் அவர்களுடைய கொட்டத்தை அடக்கி விரட்டி அடித்தார். அவர்கள் விரட்டி அடித்த பின் தனது வெற்றியை ஆண்டவனுக்கு சமர்ப்பித்து வணங்கிட அருகே வயலில் கிடைத்த அம்பாளை தெற்குக் கரையில் தற்போது கோவில் வீடு உள்ள பகுதியில் வைத்து வழிபட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

அகிலத்தை ஆளும் பராசக்தி தனது ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக எடுத்த அவதாரமே துர்க்கை. அரக்க குலத்தில் அவதரித்த மகிஷாசுரன் என்னும் அசுரனை அழிப்பதற்காக பராசக்தி தன் சக்தியிலிருந்து ஒரு மாய சக்தியை தோற்றுவித்தார். அந்த சக்திக்கு சிவன் சக்தி கொடுக்க ,அதுவே முகமாகவும் பிரம்மாவின் சக்தி உடலாகவும் திருமால் கொடுத்த சக்தி பதினெட்டு கரங்கள் ஆகவும் எமதர்மனின் சக்தி கூந்தல், அக்னி பகவானின் சக்தி கண், மன்மதனின் சக்தி புருவம், குபேரனின் சக்தி மூக்கு ,முருகனின் சக்தி உதடு ,சந்திரனின் சக்தி தனங்கள், இந்திரனின் சக்தி இடை , வருணனின் சக்தி கால் என அனைத்து சக்திகளும் இணைந்த அம்பிகையாக துர்க்கை உருவெடுத்தாள். மகிஷாசுரனுடன் போரிட்டு வென்ற இவர் மகிஷாசுரமர்த்தினி என்னும் பெயர் பெற்றார். மாரியம்மன் துர்க்கையும் வேறு வேறு வடிவங்களாக இருந்தபோதிலும் இருவரும் அம்பிகையின் அம்சமாகவே திகழ்கின்றனர். இதனை உணர்த்தும் விதமாக இந்த கோவிலில் இவ்விருவரும் சேர்ந்த அமைப்பில் காட்சி தருகின்றனர்.

இவ்வாறு ஒரே அம்பிகை இரண்டு அம்பாளை தரிசனம் செய்வது மிகவும் அபூர்வமான அம்சம் என்று கூறப்படுகிறது. இங்கு வந்து வேண்டிக்கொண்டு வேண்டியபடி காரிய சித்தி நிறைவேறப்பட்டவர்கள், அம்மனுக்கு தீச்சட்டி, பால்குடம் ,மற்றும் மாவிளக்கு எடுத்து சிறப்பு அபிஷேகங்கள் செய்து வருகின்றனர். குழந்தைகளின் நோய்கள் தீர குழந்தை தத்து எடுத்துக் கொடுத்து வாங்கி மண் சிலைகள் கொடுத்து, கரும்புத் தொட்டில் கட்டும் நிகழ்ச்ச

 

Tags :

Share via