சர்ச்சையில் சாதி பாகுபாடு விவகாரம் !

by Editor / 07-08-2021 08:25:26pm
 சர்ச்சையில் சாதி பாகுபாடு விவகாரம் !


சர்ச்சையில் சாதி பாகுபாடு விவகாரம் !
மனிதன் பிறந்தது முதல் இன்று வரை ஒழிக்க  முடியாத விஷயம் சாதி இதை கட்டிக்கொண்டு மார்தட்டும் மனிதர்கள் உள்ளனர்.  அவ்வப்போது சாதி விவகாரம் சர்ச்சயை  ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பாட புத்தகங்களில் சாதி பெயர் நீக்கப்பட்டுள்ளது  பேசு பொருளாக அமைந்துள்ளது.

இதில் வேடிக்கை  என்னவெனில் இந்த செயலை திமுக அரசு செய்தது என விவரம் தெரியாமல் பலரும் விமர்சித்து வருகின்றனர். உடனே அரசு விளக்கம் கொடுத்தது. இது இன்னும் பேசப்பட்டு வருகிறது. சாதி என்பது தேவையில்லை என அனைவரும் கருதும் நிலையில் சில சம்பவங்களை பாப்போம் ,


ஜப்பான் டோக்கியோவில் கடந்த 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி போராடி தோற்றது. இந்நிலையில் அதில் இடம்பெற்றிருந்த உத்தரகாண்ட் ஹரித்வார் கிராமத்தை சேர்ந்த வீராங்கனை வந்தனா கத்தாரியாவின் வீட்டின் முன் ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த இருவர் பட்டாசு வெடித்து தோல்வியை கொண்டாடியுள்ளனர்.

மேலும் அவரது குடும்பத்தையும் இழிவு செய்து,இந்த சாதியாக  இருப்பதால் தோற்றதாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இதையடுத்து வந்தனா கத்தாரியாவின் வீட்டின் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடி இழிவாக பேசிய ஆதிக்க ஜாதியை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக புத்தரின் ஞானமும், அம்பேத்கரின் நிலைத்தன்மையும், கன்ஷிராமின் உறுதியும் தன்னுள் இருப்பதாக வந்தனா தெரிவித்துள்ளார்.

மேலும் தான் தலித்தாக இருப்பதில் பெருமை அடைவதாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் தைரியமாகவும் நம்பிக்கையாகவும் இருப்பதாக கூறியுள்ளார். இது அண்மைய சம்பவம். கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த சம்பவம் என்ன  தெரியுமா?

 
நாட்டின் 7 ஐஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்பில் இருந்து பாதியில் வெளியேறும் 10 மாணவர்களில் 6 பேர் இட ஒதுக்கீட்டு பிரிவினர் என்று ஒன்றிய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. இடை நிற்றல் அதிகரித்துள்ள உயர் கல்வி நிறுவனங்கள் வரிசையில் அசாம் மாநிலம் கவுகாத்தி ஐஐடி 88% என்ற நிலையில் முதல் இடத்தில் உள்ளது.


டெல்லி ஐஐடி 2018ம் ஆண்டில் படிப்பை பாதியில் விட்ட 10 மாணவர்களும் இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்தவர்கள் தான். அங்கு 2019ம் ஆண்டில் இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் 76% பேர் படிப்பை பாதியில் விட்டு வெளியேறி உள்ளனர்.சென்னை ஐஐடியில் கடந்த 5 ஆண்டுகளில் படிப்பை பாதியில் விட்டு வெளியேறிய மாணவர்களின் எண்ணிக்கை 10 பேர் ஆகும்.

இவர்களில் 6 பேர் பட்டியலின மாணவர்கள் என்றும் எஞ்சிய 4 பேர் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே ஏட்டில் எழுதி நாக்கில் நக்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்  என்பதை இந்த சம்பவங்கள் தெரிவிக்கின்றன.
------------------
எஸ்.ரவீந்திரன் 
-------------------------

 

Tags :

Share via