அவங்க சொந்தக்காரங்க தான்.. ஆனா அந்த பணம் என்னுடையது இல்ல

by Staff / 25-04-2024 03:36:54pm
அவங்க சொந்தக்காரங்க தான்.. ஆனா அந்த பணம் என்னுடையது இல்ல

சென்னையில் வைத்து நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் அவருக்கு இன்று (ஏப்.25) போலீஸார் இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இது என்னுடைய பணம் அல்ல. கைதானவர்கள் 3 பேர் மட்டுமல்ல, இதில் தொடர்புடைய நிறைய பேர் எனக்கு தெரிந்தவர்கள், எனது சொந்தக்காரர்கள் தான்.. இந்த வழக்கில் என்னை சிக்க வைக்க முடியாது. இந்த வழக்கால் எனக்கு விளம்பரம் தான் கிடைத்து வருகிறது என்று தெரிவித்தார்

 

Tags :

Share via