தரவுகளை சேகரிக்கத் தொடங்கிய ஆதித்யா L1

by Staff / 18-09-2023 02:16:22pm
தரவுகளை சேகரிக்கத் தொடங்கிய ஆதித்யா L1

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா L1 தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அதிவெப்ப அறிவியல் 6 சென்சார்கள் மூலம் விண்கலத்தில் உள்ள ஆற்றல்மிக்க அணுக்கள் மற்றும் எலக்ட்ரான்களை அளவீடு செய்துள்ளது. பூமியில் இருந்து 50,000 கிமீ அப்பால் உள்ள துகள்களை ஆய்வு செய்ய இந்த தகவல்கள் உதவும் என கூறப்பட்டுள்ளது. நாளை காலை ஆதித்யா எல் 1 விண்கலம் புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து வெளியே செல்கிறது. இதனை அடுத்து செப்டம்பர் 10 ஆம் தேதி பூமியில் 50,000 கி.மீ. தொலைவில் STEPS என்ற கருவி செயல்படத் தொடங்கியுள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

 

Tags :

Share via