பிரபல சர்ச்சை யூடியூபர் பாஜகவில் இணைந்தார்.
தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வதந்தி பரப்பிய யூடியூபர் மணிஷ் காஷ்யப் இன்று(ஏப்.25) பாஜகவில் இணைந்தார். தமிழர்கள், பீகார் தொழிலாளர்களை தாக்குவதாக போலியான வீடியோ வெளியிட்டு வட இந்தியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியதால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி 9 மாதங்கள் சிறையில் இருந்தார். தற்போது ஜாமீனில் வெளி வந்த அவர், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் எம்.பி மனோஜ் திவாரி முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
Tags :