பள்ளிகள் திறப்பு எப்போது? - அன்பில் மகேஷ் ஆலோசனை

by Staff / 25-04-2024 03:32:17pm
பள்ளிகள் திறப்பு எப்போது? - அன்பில் மகேஷ் ஆலோசனை

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்தும் பள்ளிகள் திறப்பது தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் மற்றும் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பதில் கால தாமதாம ஏற்பட வாய்ப்புள்ளது. வழக்கமாக, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு ஜூன் 2ஆம் வாரத்தில் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு முடிவு வெளியீடு குறித்து அதிகாரிகளுடன் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

 

Tags :

Share via