திமுகவில் மகளிர் அணியின்  புதிய சின்னம் வெளியீடு

by Editor / 07-08-2021 04:58:08pm
 திமுகவில் மகளிர் அணியின்  புதிய சின்னம் வெளியீடு


திமுக முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு  நினைவு தினத்தையொட்டி திமுக மகளிர் அணியின் புதிய சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 


தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல் சிஐடி காலனியில் அமைந்துள்ள கனிமொழி இல்லத்திலும் அவர் கருணாநிதியின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.


மேலும்,  நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை தலைமையிடம் வளாகத்தில் ஒரு லட்சம் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அத்துடன் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையில் தரப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 


இந்நிலையில் மறைந்த முன்னாள் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி திமுக மகளிர் அணியின் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.
 திமுகவில் தொண்டர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி,. தொழிலாளர் அணி, விவசாய அணி என பல பிரிவுகள் உள்ளன.

இதில் மகளிர் அணி செயலாளராக கனிமொழி இயங்கி வருகிறார். இந்த சூழலில் மகளிர் அணியின் புதிய சின்னமாக இரண்டு பெண்கள் திமுகவின் கொடியை தூக்கி நிறுத்துவது போன்ற சின்னம். 
 

 

Tags :

Share via