சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுக்கள் வைத்து வழிபாடு

by Admin / 08-08-2021 09:41:33pm
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுக்கள் வைத்து வழிபாடு



   
கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால் அதை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என, சுவாமியிடம் அர்ச்சகர்கள் வெள்ளை, சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. இக்கோவிலில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால் மூலவருக்கு காரணமூர்த்தி என்ற பெயர் உள்ளது.

சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து குறிப்பால் உணர்த்தி அது சம்பந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு நடந்து வருகிறது. கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால் அதை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என, சுவாமியிடம் அர்ச்சகர்கள் வெள்ளை, சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ விழுந்து அனுமதி கிடைத்தால், ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது.
 
இதுவரை இங்கு மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை, இரும்பு சங்கிலி என பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது.கடந்த ஜூலை 10-ந்தேதி முதல் 10 ரூபாய் நாணயம், ஆதார் கார்டு மற்றும் பஞ்சாங்கத்துடன் சிறு மணியும் வைத்து பூஜை செய்யப்பட்டது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், முத்தூர் வேலம்பாளையத்தை சேர்ந்த கோகுல்ராஜ் என்பவரின் கனவில் பச்சை வேட்டி, துண்டு, வெள்ளை சட்டை, மதிப்பிழந்த  500 ரூபாய் இரண்டு, ஐந்து ரூபாய், இரண்டு ரூபாய், ஒரு ரூபாய், ராசி கட்டங்கள், தேங்காய், எலுமிச்சை, வெற்றிலை, பாக்கு, பூ வைத்து பூஜை செய்ய உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இந்த பொருட்கள் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via