ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி இருவரும் தங்கள் திருமண பந்தத்தை முறித்து கொண்டனர்.

by Admin / 14-05-2024 12:59:43am
 ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி இருவரும் தங்கள் திருமண பந்தத்தை முறித்து கொண்டனர்.

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி இருவரும் தங்கள் திருமண பந்தத்தை முறித்து கொண்டதாக ஜிவி பிரகாஷ்  சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தங்களுடைய 11 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளில் காரணமாக இருவரும் பரஸ்பரம்பிரிவதென்று முடிவு செய்து  அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ முடிவு எடுத்து இருப்பதாகவும் இதற்கு ஊடகங்களும் நண்பர்களும் தன் ரசிகர்களும் புரிந்து கொண்டு தனிப்பட்ட எங்களுடைய வாழ்க்கை குறித்தான செய்திகளில் ஆழமாக ஈடுபட வேண்டாம் என்றும் தங்களை புரிந்து கொண்டு எப்பொழுதும் போல் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி இருவரும் தங்கள் திருமண பந்தத்தை முறித்து கொண்டனர்.
 
Tags :

Share via