இபிஎஸ் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு அருகதை இல்லை

by Staff / 06-06-2024 05:12:25pm
இபிஎஸ் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு அருகதை இல்லை

எடப்பாடி பழனிசாமி- வேலுமணி இடையே உள்கட்சி பிரச்சினை இருப்பது போல் தெரிகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதற்கு அதிமுக ஐடி விங் சார்பில் எதிர்வினை ஆற்றப்பட்டுள்ளது. அதில், அதிமுக குறித்தோ இபிஎஸ் குறித்தோ, எஸ்.பி.வேலுமணி குறித்தோ பேசுவதற்கு அண்ணாமலைக்கு அருகதை இல்லை.தன் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்திகளைப் பார்க்காமல் அதிமுக பற்றி மூக்கு வியர்க்க பேசும் அண்ணாமலை, முதலில் தனது பதவியையும் இருப்பையும் காப்பற்றிக் கொள்ளட்டும்! ஆடு, ஓநாய், நரி என எது வந்தாலும், எப்படி கொக்கரித்தாலும் அதிமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது" என கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo