ஆப்கனில் இருந்து அமெரிக்கப்படைகள் விலகல்... வருத்தம் எதுவும் இல்லை... ஜோ பைடன் கருத்து...

by Admin / 11-08-2021 02:00:56pm
ஆப்கனில் இருந்து அமெரிக்கப்படைகள் விலகல்...  வருத்தம் எதுவும் இல்லை... ஜோ பைடன் கருத்து...

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றியதில் சற்றும் வருத்தப்படவில்லை என அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
 
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேற்றத்தை தொடர்ந்து அங்கு தலிபான்களின் கை ஓங்கியுள்ளது. சுமார் 65 சதவீத ஆப்கன் பகுதிகளை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.

இதுகுறித்து பேசிய ஜோபைடன்,  ஆப்கானிஸ்தான் தலைவர்கள் ஒன்றாக இணைந்து தங்கள் நாட்டை காக்க போராட வேண்டும் என்றும், ராணுவ வீரர்கள் வீரு கொண்டு போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டதில் அமெரிக்காவுக்கு ஒரு லட்சம் கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஏராளமான வீரர்களை இழந்துள்ளதாகவும் கூறினார்.

ஆப்கானிஸ்தானுக்கு தேவையாக வான்வழி ராணுவ உதவிகள், உணவு உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் கூறினார்

 

Tags :

Share via